மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் அதைப் பெறுவதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. சமையல் எரிவாயு நாடு முழுவதும் சுமார் 30 கோடி பேர் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் இந்த மானியம் கிடைக்க போவது கிடையாது. அதற்கு மாறாக மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு மட்டுமே ரூபாய் 200 மானியம் கிடைக்கும்.
இவர்கள் மட்டுமே அதைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். இத்திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வரும் சுமார் 1.20 கோடி பேருக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்பட உள்ளது. மற்ற 21 கோடி பேருக்கு எந்த மானியமும் கிடைக்கப்போவதில்லை. மேலும் வருடத்திற்கு அவர்கள் பெறும் 12 சிலிண்டர் மட்டுமே மானியம் வழங்கப்பட உள்ளது. அதற்கு அதிகமாக வாங்கும் சிலிண்டருக்கு மானியம் கிடைக்காது. இந்த மானியத் தொகையானது வங்கியில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த மானியத்தை நடுத்தர குடும்ப மக்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.