தொடர் மழை பொழிவு, வரத்து குறைவு ஆகிய காரணங்களால் இந்த மாதம் தொடக்கம் முதலே தக்காளி விலை அதிகரித்து வந்தது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர். மற்ற பொருட்களின் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் தக்காளி விலை உயர்ந்ததால் தக்காளி இல்லாமல் குழம்பு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை, கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.10 குறைந்து ரூ.90க்கு விற்பனையாகிறது. பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ ரூ.79க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.