Categories
மாநில செய்திகள்

தியாகராஜர் கோயிலில்…. தெப்பத் திருவிழாவின்போது….திடீரென ஏற்பட்ட பயங்கர சம்பவம்…!!!

திருவாரூர் மாவட்டதில் உள்ள  தியாகராஜர் கோவிலில் அமைந்துள்ள கமலாலயக் குளத்தில் வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை மூன்று நாட்கள் தெப்ப திருவிழா நடைபெற்றது. நேற்று நடைபெற்ற தெப்ப திருவிழாவின் போது தெற்கு கரையில் தென்மேற்கு பகுதியில் குளத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் ஒரு அலங்கார தூண் 15 அடி உயரம் திடீரென சரிந்து விழுந்தது. நல்லவேளையாக அலங்கார தூண் தெப்பத்தின் மீது விழாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தியாகராஜர் கோவில் பலூன் விற்க வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி முஸ்கான் மற்றும் ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் ஆகிய 2 பேரும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அலறி கூச்சலிட்டனர். உடனே தீயணைப்பு வீரர்கள்விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட தேடலுக்குப் பிறகு சிறுமி முஸ்கான் உடலை மட்டும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். அதன் பிறகு வெங்கடேசன் நிலமை என்ன ஆனது? என்று தெரியாததால் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தியாகராஜர் கோவிலில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

Categories

Tech |