இந்தியாவில் அறிமுகமாகி உள்ள OLA மின்சார இருசக்கர வாகனத்தை சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் அண்மையில் இந்த நிறுவனத்தின் மின்சார வாகனம் தீப்பிடித்து எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப்போலவே வாகனத்திற்கு சார்ஜ் செய்தபோது வாகனம் வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் வடிவமைப்பு குறைபாடும், சரி வர பரிசோதிக்கப்படாததுமே தீப்பிடிக்க காரணம் என்றும் டி.ஆர்.டி.ஓ ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் செலவினத்தை குறைப்பதற்காக நிறுவனங்கள் வேண்டுமென்றே தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதன் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.