ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு குழப்பமான முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர் மாணவர்களின் எதிர்காலத்தில் தமிழக அரசு விளையாடுகிறது என குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது இந்த ஐந்தாம் வகுப்பு எட்டாம் தேர்வு விஷயத்தில் தமிழக அரசு ஒரு குழப்பமான முடிவுகளை எடுத்து விட்டது. அந்த குழப்பம் என்பதையும் தாண்டி ஒரு பெரிய அரசியல் நாடகத்தையே அரங்கேற்றும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
என்னுடைய குற்றச்சாட்டு என்னவென்றால் முழுக்க முழுக்க மாணவர்களின் கல்வியை பாதிக்கக்கூடிய ஒன்று, மாணவர்களின் எதிர்காலத்தில் இந்த அரசு விளையாடி சென்றது என்பது தான் எனது குற்றச்சாட்டாக இருக்கிறது. இதை ஆரம்பத்தில் இருந்து பார்த்தால் கல்வி அமைச்சர் முதலில் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார் அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசாணையை கல்வித் துறையின் அதிகாரிகள் வெளியிடுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.