பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் பத்தாம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நிறைவடைந்த நிலையில், 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. மற்றவர்களுக்கு வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி யுடன் தேர்வு முடிவடைகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 30ஆம் தேதி தேர்வு நிறைவடைய உள்ளது.
இதில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 1ஆம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் பத்தாம் தேதி தொடங்கி 17ஆம் தேதி முடிவடையும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.