Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிபரின் அதிகாரம் ரத்து…. அரசியல் சாசன திருத்தத்திற்கு… இன்று மந்திரி சபை அனுமதி…!!!

இலங்கையில் கட்டுப்பாடில்லாத ஜனாதிபதியின் அதிகாரத்தை ரத்து செய்யக்கூடிய அரசியல் சாசன திருத்த மசோதாவிற்கு மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது.

இலங்கையில் கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் வெற்றிபெற்ற ஜனாதிபதிக்கு கட்டுப்பாடில்லாத அதிகாரங்கள் அளிக்கக்கூடிய வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ராஜபக்சே குடும்பத்தினர் தலைமை பதவிகளில் அமர்ந்தனர்.

மேலும், ஜனாதிபதியை விட நாடாளுமன்றத்திற்கு அதிகமான அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. அந்த சட்ட திருத்தமும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. நாடு முழுக்க மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

எனவே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். தற்போது, ஜனாதிபதிக்கு கட்டுப்பாடில்லாமல் அளிக்கப்பட்ட அதிகாரம் ரத்து செய்யப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, இது குறித்த அரசியல் சாசன திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

Categories

Tech |