Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ 1 லட்சம் பென்சன் வேணுமா?…. இதோ சூப்பர் வழி இருக்கு…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

தேசிய ஓய்வூதியம் அமைப்பானது (NPS) குடிமக்களின் ஓய்வுகாலத்தை சிறந்த முறையில் வழிநடத்துவதற்கு ஒருசில வசதிகளை செய்து தந்திருக்கிறது. அந்த வகையில் தேசிய ஓய்வூதிய திட்டத்தை மக்களுக்காக கொண்டுவந்தது. இது அரசு ஊழியர்களுக்காக கடந்த ஜனவரிமாதம் 2004 வருடத்தில் துவங்கப்பட்ட அரசு வழங்கும் ஓய்வூதியத் திட்டம் ஆகும். இதையடுத்து சென்ற 2009 ஆம் ஆண்டில் அனைத்து பிரிவினருக்கும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது இந்திய குடிமக்களுக்கு முதியோர் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் துவங்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் முதலீட்டு திட்டம் ஆகும். NPS-ஐ 2 வகைகளாக பிரிக்கலாம். அதாவது அரசு ஊழியர்கள் மற்றும் பிற தனிநபர்கள்.

ஜனவரி 1, 2004 அல்லது அதன்பின் சேர்ந்த மத்திய தன்னாட்சியமைப்புகளின் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் NPS-ன் அரசுத்துறையின் கீழ் வருவார்கள். அதே நேரம் மே 1 2009 முதல் வேறுஎந்த ஒரு தனி நபரும் தானாக முன் வந்து NPSல் சேர அனுமதிக்கப்படுவார்கள். 18, 60-க்கு இடைப்பட்ட எந்தஒரு இந்தியகுடிமகனும் NPS-ல் சேரலாம். இதில் NPS-ன் கீழ் தனி நபர்கள் POP, முதலீட்டு முறை மற்றும் நிதி மேலாளர் எனப்படும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க (அல்லது) மாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். இவற்றில் ஈக்விட்டி, கார்ப்பரேட் பத்திரங்கள், அரசுப்பத்திரங்கள் மற்றும் மாற்று சொத்துக்கள் என பல சொத்து பிரிவுகள் இருக்கிறது. அத்துடன் நிதிமேலாளர்கள் வாயிலாக ஒருவர் தன் வசதிக்கேற்ப வருமானத்தை மேம்படுத்த இயலும் என்பதை இது உறுதி செய்கிறது. இதில் 2 வகையான அக்கவுண்ட் இருக்கின்றன.

அடுக்கு 1 அக்கவுண்ட் என்பது முக்கியமாக ஓய்வூதிய சேமிப்புக்காக இருக்கிறது. அதன்படி இதில் ஒருவர் கணக்கைத் திறக்கும்போது குறைந்தபட்சமாக ரூ. 500 செலுத்தவேண்டும். இது வருமான வரிச்சட்டம் 1961-ன் பிரிவு 80CCD (1B)’இன் வரிச்சலுகைகளையும் வழங்குகிறது. அதன்பின் அடுக்கு 1ன் கீழ் அக்கவுண்ட் இருப்பவர்கள் ஓய்வுபெறும்போது அவர் பணியாற்றிய வருடங்களில் செலுத்தப்பட்ட திரட்டப்பட்ட கார்பஸில் 60 சதவீதத்தை திரும்பப்பெற அனுமதிக்கப்படுகிறது. இவை வரி இல்லாதது ஆகும். மீதமிருக்கும் 40 % வருடாந்திர பணமாக மாற்றப்படுகிறது. இவற்றில் குறைந்தபட்சமாக ரூ. 1,000 முதலீட்டில் திறக்கவேண்டும்.

இதில் சந்தாதாரர் எந்நேரத்திலும் தன் முழு கார்பஸை திரும்பப்பெறலாம். இக்கணக்கில் வரிச்சலுகைகள் எதுவும் கிடையாது. தனிநபர் ஒருவர் 25 வயதில் இந்த திட்டத்தில் சேர்ந்து மாதம் ரூபாய் 5,000 பங்களிக்கத் துவங்கினால், ஓய்வுபெறும் வரை மொத்த பங்களிப்பாக ரூபாய் 21 லட்சம் இருக்கும். வருடத்திற்கு எதிர்பார்க்கப்படும் 10 % வருமானம் கிடைத்தால், மொத்த முதலீடு என்பது ரூபாய் 1.87 கோடியாக வளரும். தற்போது சந்தாதாரர் மொத்த தொகையில் 65 சதவீதத்தை வருடாந்திரமாக மாற்றினால், அவற்றின் மதிப்பு ரூபாய் 1.22 கோடியாக இருக்கும். இதனிடையில் 10 % வருடாந்திரம் விகிதத்தினை வைத்திருந்தால், மொத்தத் தொகையான ரூபாய் 65 லட்சத்தைத்தவிர மாதாந்திர ஓய்வூதியம் என்பது ரூபாய் 1 லட்சமாக இருக்கும்.

Categories

Tech |