Categories
உலகசெய்திகள்

“அற்புதம் எனக் கூறிய போரிஸ்”…. பிரான்ஸ் குடியுரிமை பெற்ற இங்கிலாந்து பிரதமரின் தந்தை…!!!!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவி வகித்து வருகின்றார். இவரது தந்தை ஸ்டான்லி ஜான்சன் (81) இவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்னாள் உறுப்பினராக  கடந்த 2021 ஆம் வருடம் நவம்பரில் பிரெஞ்சுக் குடியுரிமை கோரி விண்ணப்பித்திருந்தார். இதனை பரிசீலித்த பிரான்ஸ் அரசு அவருக்கு குடியுரிமை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று  அவருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் நிதி அமைச்சகம் சமீபத்தில் இதனை உறுதி செய்திருக்கின்றது. மேலும் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற பின் ஸ்டான்லி பேசும்போது, நான் முழுமையாக மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த பின் இங்கிலாந்து பிரதமரான உங்களது மகன் போரிஸ் ஜான்சன் எதிர்வினை என்னவாக இருந்தது என்பதற்கு பதிலளித்த ஸ்டான்லி ஒரே வார்த்தையில் போரிஸ் அற்புதம் என்றார் என தெரிவித்துள்ளார்.

அரசியல்ரீதியாக ஸ்டான்லி மற்றும் போரிஸ் இருவரும் எதிரெதிர் முனைகளில் நின்றிருக்கின்றன. பிரெக்சிட்டில் இருந்து இங்கிலாந்து வெளியேற போரிஸ் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில் தொடர்ந்து பிரெக்சிட்டில் நீடிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக அவரது தந்தை வாக்களித்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரெக்சிட்டில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பின்னர் ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஒரு  தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் நான் விரும்புகின்றேன்.

அதனாலேயே பிரெஞ்சு குடியுரிமை பெற்று உள்ளேன் என ஸ்டான்லி  தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் ஸ்டான்லி  தாயார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். அவர் வெர்செல்ஸ்  நகரில் பிறந்து இருக்கின்றார். அதன் அடிப்படையிலும் உணர்வு ரீதியாக பிரான்ஸ் குடியுரிமை பெற்றிருக்கிறேன்  என ஸ்டான்லி  ஒப்புக்கொண்டிருக்கிறார்.

Categories

Tech |