சீனா போர் தொடுத்தால் அமெரிக்கா, தைவான் நாட்டை பாதுகாக்கும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருக்கிறார்.
சீன நாட்டில் கடந்த 1949-ஆம் வருடத்தில் உள்நாட்டு போர் நடந்தது. அதன் பிறகு சீனாவிலிருந்து பிரிந்து தைவான் தனி நாடாக மாறியது. எனினும், சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக் கொண்டிருக்கிறது. மேலும், தேவைப்படும் பட்சத்தில் அதிக படைகளுடன் சென்று தைவானை கைப்பற்றவும் செய்வோம் என்று சீனா கூறுகிறது.
இது மட்டுமல்லாமல் தைவான் நாட்டின் வான் பகுதிக்குள் சீன போர் கப்பல்கள் அவ்வப்போது நுழைவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீனா, தைவான் நாட்டின் மீது போர் தொடுத்தால், நாங்கள் அந்நாட்டை பாதுகாப்போம் என்று கூறியிருக்கிறார்.