Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!!!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றோம்.

மேலும் 2021 – 22 ஆம் ஆண்டில் 1997 கிராமப் பஞ்சாயத்துகளில் ரூபாய் 627 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் அதை இன்றைக்கு நான் தொடங்கி வைத்து இருக்கின்றேன். இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமே கிராம அளவில் அரசு துறைகளின் அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைந்து செயல்படுவது தான் என தெரிவித்து இருக்கின்றார்.

மேலும் இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன,
* கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல்
* நீர்வள ஆதாரத்துறை பெருகி சூரிய சக்தி பம்பு செட்டுகள் உடன் நுண்நீர் பாசன வசதி ஏற்படுத்துதல்
* வேளாண் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைபடுத்துதல்
* ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக பண்ணை குட்டை அமைத்தல் மற்றும் கிராம வேளாண் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல்
* கால்நடைகளின் நலன் காத்து பால் உற்பத்தியை பெருக்குதல்
* வருவாய்த் துறையின் மூலமாக பட்டா மாறுதல், இ-அடங்கல், சிறு, குறு உழவர்களுக்கு சான்று வழங்குதல்
* கூட்டுறவு சங்கங்களின் மூலமாக அதிக அளவு பயிர் கடன் வழங்குதல்
* பாசன நீர் வழித்தடங்களை தூர்வாருதல்
* உணவு உற்பத்தியாளர்கள் குழுக்களை உருவாக்கி தேவையான தொழில்நுட்ப பயிற்சிகளை அளித்து வேளாண்மை உலக நலத் துறையின் பல துறைகளில் திட்டங்கள் செயல்படுத்துதல்.

Categories

Tech |