கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாரிப்பேட்டை பகுதியில் மிகவும் பிரபலமான மீன் சந்தை ஒன்று அமைந்துள்ளது. இந்த சந்தையில் கெட்டு போன மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக உணவு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் கடைகளில் ஆய்வு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி உணவுத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தையில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தது உறுதியானது.
இதனையடுத்து அதிகாரிகள் கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது. இந்த மீன் சந்தையில் மீன்கள் 18 செல்சியஸ் அளவில் பாதுகாப்பாக வைக்காததால் கெட்டுப் போனது. மேலும் இதுகுறித்து மீன் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்யப்படும். அப்போது கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது மீன்பிடி தடைகாலம் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுவதால் விலை உயர்வது குறிப்பிடத்தக்கது.