கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச்சுவர் மீது மோதிய விபத்தில் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சாமிநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 23 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் சங்ககிரி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக தடுப்பு சுவர் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.