தமிழகத்தில் தபால் துறையில் 4,310 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை வட்டாரத்தில் உள்ள கிராமின் டாக் சேவையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் துறையில் மொத்தமாக 4310 காலிப்பணியிடங்கள் உள்ளன .
பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் பணிக்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூபாய் 12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். அதையடுத்து அசிஸ்டன்ட் பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தபால் நிலைய பொருட்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு சென்று தபால்களை புக்கிங் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதைத்தொடர்ந்து தக் சேவக் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி போஸ்ட் மாஸ்டர் ஆகியோருக்கு உதவியாக இருக்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு வரை கணினி அறிவியலை ஒரு பாடமாக படித்து இருப்பவர்கள் மட்டுமே இந்தத் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் கணினி பயிற்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு மாதம் பத்தாயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். ஜூன் 5ஆம் தேதிபடி, 18 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்களாக இருந்தால் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.