Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி…. பிறந்த நாளில் கணவன் செய்த காரியம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் பிறந்த நாளன்று வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள குமனஞ்சாவடியில் ஜீவானந்தம்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு அதே நிறுவனத்தில் வேலை பார்த்த கோமதி (22) என்ற பெண்ணை ஜீவானந்தம் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே நேற்று குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று ஜீவானந்தத்திற்கு பிறந்தநாள். இதனால் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது ஜீவானந்தம் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜீவானந்தத்தின் உடலை கைப்பற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |