Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவர் அனுப்பிய நோட்டீஸ்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் செந்தில் நகர் 8-வது குறுக்கு தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் ராகதேவி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 5 மாதங்களாக ராகதேவி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் சதீஷ் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ராகதேவி தனது வீட்டில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த ராஜமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |