விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ள தெலுங்கு நடிகை குறித்து அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டுகின்றார். இந்த படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றது. பான் இந்தியா படமாக உருவாக உள்ள நிலையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கின்றது. இப்படத்தில் எழுபதுகளில் இருந்தது போல சென்னை மவுண்ட் ரோடு செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் கதாநாயகி குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரித்து வர்மா இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.