Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான காதலர்கள்…. கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மின்வாரிய கோபுரத்தில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசன்குப்பம் கிராமத்தில் இன்பராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டெல்லிபாபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் செய்யாறு அரசு கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென மாயமானார்கள். இதனையடுத்து மாயமான இருவரும் கடந்த 21-ந் தேதி பின்னந்தாங்கல் கிராமத்தில் உள்ள மாணவி வீட்டிற்கு வந்தனர்.

இந்நிலையில் டெல்லிபாபு மாணவியின் வீட்டு அருகில் உள்ள மின்வாரிய கோபுரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தூசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டெல்லிபாபுவின் உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டெல்லிபாபு தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |