Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி பள்ளியில் 48 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி”… ஏராளமானோர் பங்கேற்பு….!!!!

தூத்துக்குடி பள்ளியில் 48 வருடங்களுக்குப் பிறகு மாணவர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எஸ்.ஏ.வி மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு 1973-74 ஆம் வருடம் பயின்ற மாணவர்கள் நாற்பத்தி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சியானது பள்ளி வளாகத்தில் நடைபெற பழைய மாணவரான மோகன் தலைமை தாங்க மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகிக்க வெங்கடேசன் வரவேற்றுப் பேச பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்களான சங்கர்ராமன், பொன்னு அண்ணாமலை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இவ்விழாவில் கலந்துகொண்ட பழைய மாணவர்கள் தங்களது பள்ளி நினைவுகள் பற்றி பேசினார்கள். இப்பள்ளி நூலகத்திற்கு மாணவர்கள் சார்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Categories

Tech |