வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக இந்த ஆண்டு புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் நிறைய அம்சங்கள் இருந்தாலும் சில பிரச்சனைகளை வரி செலுத்துவோர் சந்தித்தனர். வரி செலுத்தும் போது தொழில்நுட்ப ரீதியாக நிறைய பிரச்சினைகள் இருப்பதாகவும் இது சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் வரி செலுத்துவோர் புகார்களை தெரிவித்தனர். அதனால் இந்த இணையத்தளத்தை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கியது. அதன் பிறகு தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டன. இருந்தாலும் இன்னும் சில கோளாறுகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்ததால் ரிட்டன் தாக்கல் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில் வருமான வரித்துறை புதிய நடவடிக்கையில் இறங்கியது. போர்ட் அடியில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் வரி தாக்களுக்கான கால அவகாசத்தை நீடிப்பது குறித்து வருமானவரித்துறை ஆலோசனையில் ஈடுபட்டது. அதன்பிறகு ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்ய மே 24ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றுடன் கால அவகாசம் நிறைவடைகிறது.