குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதிக்கு பதில் முன்கூட்டியே மே 24-ஆம் தேதி இன்று திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உள்ளது. அதன்படி மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 115.35 அடியாகவும் நீர் இருப்பு 86.25 டிஎம்சி அடியாகவும் உள்ளது. அதிக நீர் வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காவிரி டெல்டா விவசாயிகளின் நலனைக் கருதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12-ஆம் தேதிக்கு முன்பாக அதாவது இன்று முதல் நீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
நமது நாடு சுதந்திரம் அடைந்தது முதல் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் நீர் திறந்துவிடப்படுகிறது. ஆனால் இதற்கு முன்பாக தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நீர் திறந்து விடப்படுகிறது. திமுக ஆட்சியில் இது இரண்டாவது முறையாகும். அதுமட்டுமல்லாமல் மே மாதத்தில் இவ்வாறு மிக முன்னதாக பாசனத்திற்கு நீர் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறையாகும். நீர் திறப்பால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும். வடிகால்கள் தூர்வாரும் பணி மே இறுதிக்குள் முடிவதால் நீர் கடைமடை வரை சென்றடைய வாய்ப்பு உள்ளது.