Categories
மாநில செய்திகள்

இதற்கு விண்ணப்பிக்க நாளை(25.5.22) கடைசி தேதி…. உடனே போங்க…. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் மிகவும் பொருளாதாரத்தில் நலிந்த,ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என்ற திட்டம் தமிழக அரசால் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் சேரக்கூடிய குழந்தைகள் எல்.கே.ஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வருகின்ற 2022- 2023-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையும் தற்போது ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு, மொத்தமாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் உள்ளது. அதில் நேற்று வரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து இவ்வாறு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ,நாளை கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்த அறிவிப்பினை மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம், வருகின்ற 25 ஆம் தேதி(நாளை) வரை நீட்டிப்பு செய்திருப்பதாக தற்போது வெளியிட்டுள்ளது.

Categories

Tech |