Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…. முதன் முறையாக….இத்தனை கோடி உயர்வா!….வெளியான ஷாக் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் போர், வன்முறை, மனித உரிமை மீறல்கள், பொருளாதாரம் போன்ற பல்வேறு பிரச்சனைகள், பல பகுதிகளில் நிகழ்ந்துள்ளன. இதனால் மக்கள் தங்களின் நாடுகள் மற்றும் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக, சிரியா, ஏமன், ஈராக், எத்தியோப்பியா, பர்கினோ பாசோ, மியான்மர், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், காங்கோ குடியரசு ஆகிய நாடுகளில் உள்நாட்டு போர் உள்ளிட்ட பல காரணங்களால் அந்நாடுகளில் இருந்து மக்கள், வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தற்போது, உக்ரைன் – ரஷியா இடையே போர் நடைபெற்று வருவதால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரைக்கும் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் தாங்கள் வாழ்ந்து வந்த பகுதியில் இருந்து போர் உள்ளிட்ட பல காரணங்களுக்காக இடம்பெயர்ந்துள்ளனர்.  இவ்வாறு ஐநா அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது வரை  அகதிகளாக இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கையானது 10 கோடியை தாண்டியுள்ளது இதுவே முதல்முறை எனவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |