தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அரசு இதற்கு எதிராக பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். அதனால் பெண்கள் வெளியில் வருவதற்கு அஞ்சுகின்றனர். நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் தினம்தோறும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதிலும் சில சம்பவங்களை பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் அரங்கேறியுள்ளது.
சென்னையில் 43 வயது பெண்ணை 20 வயது நபர் வீடு புகுந்து கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தலைநகரை உலுக்கியுள்ளது. வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது தினமும் நோட்டமிட்டு வந்த அந்த கொடூரன் தனியாக வந்த பெண்ணை மிரட்டி வன்கொடுமை செய்துள்ளான். இந்த சம்பவத்தால் சென்னையில் தங்கி வேலை பார்க்கும் பெண்கள் பீதி அடைந்துள்ளனர். அந்த காம கொடூரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.