Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேரூர் பட்டீசுவரர் கோவில் “பேட்டரி கார் வசதி” ….தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு…!!!

மருதமலை முருகன் கோவிலில் லிப்ட் அமைப்பதற்கு ரூ 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கோவை மாவட்டம், பேரூரில் பட்டீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று முன்தினம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்து விட்டு ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கோவிலுக்கு வரும் முதியோர் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ரூ 5.25 லட்சம் மதிப்பீட்டில் தனியார் நன்கொடை வழங்கிய பேட்டரி கார் சேவையை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக், ஒன்றிய பொறுப்பாளர் சாமிபையன், பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, துணைத் தலைவர் நாராயணசாமி மற்றும் இந்திய சமய அறநிலைத் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதன் பின் அமைச்சர் பேசியதாவது, தமிழக இந்து சமய அறநிலையத்துறை தனது பயணத்தை மனநிறைவோடு ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. சட்டமன்றத்தில் அறிவிப்பு எண் 35-ல் அறிவிக்கப்பட்டது போன்று ஏற்கனவே பழுதடைந்த 21 பேட்டரி கார்களை சரி செய்ய வேண்டும். மேலும் அது போக 13 திருக்கோவில்களில் பேட்டரி கார் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்தார். அதில் முதல்கட்டமாக பேரூரில் பேட்டரி கார் வசதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து திருக்கோவில்களில் மலைப்பாதை அமைப்பதற்கு ரூ ஒரு கோடி நிதி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வு செய்வதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். திருவண்ணாமலை மருதமலை கோவில், சதுரகிரி கோவில், போளூர் நரசிம்மன் கோவில், பூண்டி வெள்ளியங்கிரி திருக்கோவில் உட்பட 5 கோவில்களில் துறை ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் முதல் கட்டமாக பூண்டி வெள்ளியங்கிரி கோவில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கரிகால சோழனால் கட்டப் பட்டிருந்த பேரூர் கோவிலில் கடந்த 2010-ஆம் வருடம் குடமுழுக்கு நடைபெற்றது. தற்சமயம் கோவிலுக்கு ரூ 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் நடப்பதற்கு உத்தரவிடப்பட்டது. விரைவில் குடமுழுக்கு நடைபெறும்.

கோவை மாவட்டத்தில் ரூ 63 கோடி செலவில் திருப்பணிகள் நடத்தப்பட்டு குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மருதமலை முருகன் கோவிலில் லிப்ட் அமைப்பதற்கு ரூ 6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணி விரைவில் தொடங்கும். இதைத்தொடர்ந்து மருதமலை கோவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், பழனி இடும்பன் மலைக்கோவிலுக்கு ரோப்கார் அமைப்பதற்கு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோவில்களில் தாய்மார்களுக்குப் பாலூட்டும் அறை அமைக்கப்படும். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி தான் திருக்கோவில் வரலாற்று பொருட்காட்சி என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |