Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன இருக்குனு கூட பாக்காம…. காதலியுடன் கடலை….. மர்ம பொருள் வெடித்து…. வாலிபர் படுகாயம்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாபேட்டையில் மர்மப்பொருள் வெடித்ததில் படுகாயம் அடைந்த இளைஞர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 ராணிப்பேட்டை  மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே கைவிடப்பட்ட கட்டுமானம் ஒன்றின் அருகே வெங்கடேசன் என்ற இளைஞர் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது சிகரெட் ஒன்றை பற்ற வைத்துவிட்டு அருகிலிருந்த குப்பையில் போட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது குப்பையில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்ததில் படுகாயம் அடைந்தார்.  இதையடுத்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றது.

Categories

Tech |