Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தமிழக அரசை முட்டாளாக்கிய அதிகாரிகள்…. கட்டாத வீட்டை கட்டியதாக கூறி பண மோசடி….!!

செங்கல்பட்டு அருகே கட்டாத வீடுகளை கட்டியதாக கூறி பணமோசடி நடந்து, அது  அரசு  ஆவணத்திலையே பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் விளாங்காடு ஊராட்சியை சேர்ந்தவர் கண்ணன். இவரது சித்தப்பா மாரி என்பவருக்கு இதுவரையில் அரசு ஆணை எதுவும் இல்லாத நிலையில்,  மாரி என்ற பெயரில் வீடு கட்டியதாகவும், அதற்கான அனைத்து தொகைகளும் வங்கியில் பரிமாற்றம் நடந்து, அந்த தொகையில் வீடு கட்டியதாகவும் அரசு ஆவணத்தில் பதியப்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்,

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த கோரி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதே போல்இதே ஊராட்சிக்குட்பட்ட கோட்டையபாக்கம் கிராமத்தில் முருகன் என்பவரது பெயரிலும் வீடு கட்டியதாக மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒதுக்கப்பட்ட வீடுகளில் அனைத்து வீடுகளும் முறையாக முடிக்காமல் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யாமல் அதிலும் சில வீடுகள் காட்டாமலேயே கட்டியதாக முறைகேடு நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருக்கிறார்கள்.. இந்த முறைகேடுகள் குறித்து தமிழக அரசும்,, மாவட்ட ஆட்சியரும் உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Categories

Tech |