Categories
தேசிய செய்திகள்

விஸ்மயா மரண வழக்கு….. “குற்றவாளி கிரண் குமாருக்கு 10 ஆண்டு சிறை”…. கோர்ட் அதிரடி..!!

கேரள பெண் விஸ்மயா வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள சாஸ்தாம் கோட்டா பகுதியில் விஸ்மயா (22) என்ற பெண் வசித்து வந்தார். ஆயுர்வேத மருத்துவம் படித்து வந்த இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான (மோட்டார் வாகன உதவி ஆய்வாளர்) கிரண்குமார் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கிரண் குமாருக்கு வரதட்சணையாக 100 பவுன் நகை, 10 லட்சம் ரொக்கம், ஒரு ஏக்கர் நிலம் மற்றும் கார் வழங்கப்பட்டது..

இதையடுத்து மனைவி விஸ்மயாவை, கிரண்குமார் கூடுதலாக வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 21ம் தேதி மர்மமான முறையில் விஸ்மயா வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

இதற்கு முதல்நாள் தான் விஸ்மயா, கணவர் அடித்ததால் தனக்கு ஏற்பட்ட காயங்களை புகைப்படங்கள் எடுத்து வாட்ஸ்ஆப் வாயிலாக உறவினருக்கு பகிர்ந்துள்ளார். கேரளாவை மட்டுமில்லாமல் இந்தியாவையே  உலுக்கிய இந்த வரதட்சணை கொடுமை சம்பவத்தையடுத்து, கிரண்குமார் கைது செய்யப்பட்டார்..

இவ்வழக்கை விசாரித்து வந்த கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் விஸ்மயா மரணத்தில் கணவர் கிரண்குமார் குற்றவாளி என நேற்று தீர்ப்பு அளித்தது. மேலும் குற்றவாளியின் தண்டனை விபரம் நாளை (இன்று) அறிவிக்கப்படும் என்று நீதிபதி சுஜித் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் குற்றவாளி கிரண் குமாருக்கு தண்டனையை அறிவித்தார் கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுஜித்.. அதாவது, கேரள பெண் விஸ்மயா வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர் குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ 12.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் வழங்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Categories

Tech |