ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த எரிக் என்பவர் நீச்சல் போட்டியில் மிக அதிகமான நேரத்தில் வெற்றிபெற்றவர் ஆவர். இவர் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக் 100 மீட்டர் நீச்சல் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளார். இந்நிலையில் எரிக் சிறு வயதிலிருந்தே நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பியுள்ளார். ஆனால்அவருடைய ஊரில் நீச்சல் குளம் இல்லாததால் குளம் மற்றும் கடல் போன்றவைகள் மூலமாக நீச்சல் பயிற்சி செய்துள்ளார். இவர் முதன்முதலாக கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவருடன் போட்டி போட்ட சக போட்டியாளர்கள் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நீச்சல் குளத்திற்குள் குதித்து விட்டனர். இதனால் அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு எரிக் மட்டும்தான் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டார். இதனால் ஒலிம்பிக் வரலாற்றில் 1.52 என்ற மணிக்கணக்கில் அதிகமான நேரத்தில் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர் என்ற ரெக்கார்டை வைத்துள்ளார்.