Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நில பிரச்சனையால் ஏற்பட்ட முன்விரோதம்” பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நில பிரச்சனை காரணமாக தகராறு செய்த 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒபுலிகாட்டூர் பகுதியில் கூலி தொழிலாளியான சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த  சிலருக்கும் இடையே  நில பிரச்சனை  காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களிடம்  விசாரணை செய்தனர். மேலும் காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட சக்திவேல், திருப்பதி, மணிமேகலை, உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |