பல நடுத்தர மற்றும் உயர்தர உணவகங்கள் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் வசூலித்து வருகின்றது. சேவை கட்டணம் என்பது வாடிக்கையாளர்கள் தாமாக விரும்பி கொடுப்பதே தவிர கட்டாயம் இல்லை என்பது அரசு விதி முறையாகும். இந்த நிலையில் பல்வேறு உணவகங்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக சேவை கட்டணம் வசூலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் புகார் அளித்து வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக சில உணவகங்கள் மீது அதிக சேவை கட்டணம் வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் விதிமுறைகளை மீறி கட்டாய சேவை கட்டணம் வசூல் செய்யக்கூடாது என உணவகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேலும் இதுபற்றி ஆலோசனை மேற்கொள்வதற்கான தேசிய உணவகங்கள் சங்கத்துடன் ஜூன் இரண்டாம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.