Categories
உலக செய்திகள்

முன்னாள் பிரதமரின் கட்சியினர் 100 பேர் கைது…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!!

பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கவிழ்ந்தது. இதனையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார். தனது அரசை வெளிநாட்டு சதி செய்துவிட்டதாகவும், உடனே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் கட்சியினர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரம்மாண்டமான பேரணி, பொதுக் கூட்டத்தை நாளை நடத்த திட்டமிட்டனர்.

அதன்படி இஸ்லாமாபாத் பாகிஸ்தான் இஸ்லாமாபாதத்துக்கு பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சியினர் செல்ல தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சியினரை நள்ளிரவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து இம்ரான்கான் கூறியது, அமைதியாக போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி ஆட்சியில் அமர்ந்ததல் இருந்து பாசிச நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனது அரசாங்கம் எப்போது எதிர்க்கட்சியின் பேரணிகளை நிறுத்தியதே கிடையாது. இதுதான் ஜனநாயகவாதிகளுக்கும் நாட்டை திருடியவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம்” என்று கூறியுள்ளார்ம்

Categories

Tech |