Categories
தேசிய செய்திகள்

எனக்கு அது வேண்டாம்… இத வாங்கிட்டு வாங்க… அலைந்து திரிந்து பரிசளித்த கணவன்… மகிழ்ச்சியின் உச்சத்தில் மனைவி…!!

கேரளாவில் மணப்பெண் கேட்ட அனைத்து  புத்தகங்களையும் வாங்கி கொடுத்து அவரை திருமணம் செய்து கேரள வாலிபர் அசத்தியுள்ளார்.

இன்றைய காலத்தில் புத்தகம் வசிப்பவர்களை நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் செல்போன் வந்ததிலிருந்து முற்றிலும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் மறந்து போனது என்றே சொல்லலாம்.  ஏதோ ஒரு சில பேர் புத்தகம் வாசிப்பதை நாம் பார்த்திருப்போம். இந்தநிலையில் கேரளாவில் இந்த ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவின் கொல்லத்தில் வசித்து வரும் இஜாஸ் ஹக்கீம் மற்றும் அஜ்னா நிஜாம் என்ற பெண்ணுக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நிச்சயம் நடந்தது. அதன்படி 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ல் திருமணம் நடைபெறும் என நிச்சயிக்கப்பட்டது. அப்போது அஜ்னா மணமகனிடமிருந்து மெஹர் (மணப்பெண்) சம்பிரதாயப்படி, எனக்கு சிலவற்றை நீங்கள் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Image result for AjnaNizam

அதன்படி மணமகனிடம் பொன், பொருள், நகை வீடு என பிடித்த எதை வேண்டுமானாலும் எனக்கு வேண்டும் என கேட்கலாம். அது மணமகளின் உரிமை. மணப்பெண் கேட்பதை மணமகன் மறுக்காமல் கண்டிப்பாக வாங்கி தர வேண்டும். ஆனால் அஜ்னா ஆடம்பரமாக எதையும் கேட்கவில்லை. அவர் எனக்கு புத்தகம் வேண்டும் என கேட்டு ஆச்சரியப்படுத்தினார். மெஹர் முறையில் தனக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கி தர கோரி, ஒரு நீண்ட  பட்டியலை ஹக்கீமிடம் கொடுத்துள்ளார்.

 

அஜ்னாவின் வித்தியாசமான ஆசையை புரிந்து கொண்ட ஹக்கீம் மறுப்பு தெரிவிக்காமல், அவர் பட்டியலிட்டு சொன்ன சுமார் 80 புத்தகங்களுடன் சேர்த்து தனக்கு பிடித்த 20 புத்தகங்கள் என மொத்தம் 100 புத்தகங்களை தேடி பிடித்து அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வாங்கி திருமணத்தன்று பரிசாக கொடுத்து அசத்தினார். இதனால் எல்லை கடந்த சந்தோஷத்தில் மிதக்கிறார் அஜ்னா. மனைவியின் ஆசையை நிறைவேற்றுவது தவிர மணமகனுக்கு வேறு என்ன சந்தோசம் என்பது போல ஹக்கீம் செயல்பட்டார்.

Image result for AjnaNizam

இது தொடர்பான புத்தகத்தின் புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் திருமணம் முடிந்து சில நாட்களில் ஹக்கீம் பதிவிட்டுள்ளார். அவர் வாங்கி பரிசளித்ததில் பைபிள், குரான், கீதை மற்றும் இந்திய அரசியலமைப்பு உள்ளிட்ட புத்தகங்களும் அடங்கும். திருமணத்தின் போது மேடையில் ஹக்கீம் புத்தகங்கள் பரிசளிக்கும் புகைப்படம் மற்றும் கட்டிலில் அஜ்னா அமர்ந்திருந்து படித்து கொண்டிருக்க பரிசு புத்தகங்களால் அவர் சூழப்பட்டுள்ள புகைப்படம் உள்ளிட்டவை இணையத்தில் பாராட்டுக்களை பெற்று தற்போது வைரலானது.

இது பற்றி கணவன் ஹக்கீம் கூறுகையில், நாங்கள் இந்த போட்டோஸ் அனைத்தையும் தனிப்பட்டதாக தான் வைத்திருந்தோம். ஆனால் எங்கள் நண்பர்கள் இதனை பொதுவெளியில் பகிர விரும்பம் தெரிவித்து ஷேர் செய்தனர். எனவே தான் எங்களுக்கு திருமணம் முடிந்து இவ்வளவு நாட்கள் கழித்து இந்த செய்தி வைரலாகி வருகிறது. இதற்கு முன் 2016- ஆம் ஆண்டு இதே கேரளாவில் முஸ்லிம் மணப்பெண் ஒருவர், இதேபோலவே மெஹராக 50 புத்தகங்கள் எனக்கு பரிசாக வேண்டும் என கேட்டு மணமகனிடம் இருந்து வாங்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |