கொரனோ வைரஸ் தாக்குதலை கவனிக்க தவறி விட்டோம் என்று WORLD HEALTH ORGANISATION முதல்முறையாக ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியுள்ளது.
தற்போது உலக நாடுகளே பயந்து நடுங்கக்கூடிய ஒரு நோய் என்றால் அது கொரோனா வைரஸ் தாக்குதல் தான். இது சீனாவின் ஹூகான் நகரில் ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை தாக்கக் கூடிய அபாயத்தை விடுத்துள்ளது. எளிதாக காற்றில் பரவும் நோயை கண்டு உலகநாடுகள் நடுங்கி கொண்டிருக்கின்றன. தற்போது பரவலாக இது குறித்து பல நாட்டு தலைவர்கள் பேசி வரும் நிலையில்,
WORLD HEALTH ORGANISATION இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து உலக நாடுகள் கவலை கொள்ள தேவையில்லை. இதன் பாதிப்பு மிதமான நிலையில் தான் உள்ளது என்று கூறியுள்ளது.
இந்நிலையில் இன்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், வைரஸ் பாதிப்பை கவனிக்கத் தவறியதை ஒப்புக் கொண்டுள்ளது. இதற்காக உலக நாடுகளிடம் அந்த அமைப்பு மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் சீனாவுக்கு வெளியே 15 நாடுகளில் 62 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது என்பதையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.