இன்றைய காலத்தில் மக்கள் பரபரப்பான வாழ்க்கையை எப்போதும் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக தங்களது உடல்களை பற்றிய ஒரு சிறிதும் கவலை இல்லாமல் இருந்து வருகின்றனர். தொழில், பணி ஆகியவை நிரந்தரம் அற்றதாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் மருத்துவமனைக்கு கூட்டம் கூட்டமாக சிகிச்சைக்கு சென்று வருகின்றனர். இதுபோன்ற சூழலில் நமக்கு கைகொடுப்பது சேமிப்பு பணம். அந்த வகையில் அதிக லாபம் தரும் மத்திய அரசின் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஒன்று அஞ்சலக டைம் டெபாசிட் திட்டம்.
அஞ்சலகங்களில் 1,2,3, 5 வருடம் வரை டெபாசிட் உண்டு. இதில் 7 நாள் முதல் ஒரு வருடம் வரை 5.50 சதவீதம் வட்டியும், ஒரு வருடம் ஒரு நாள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை 5.50 % வட்டியும், 3 முதல் 5 ஆண்டுகள் வரை 6.70 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது. இதில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வழிகளிலும் இணையலாம். குறைந்தபட்சம் ஆயிரம் முதலீடு செய்யவேண்டும். 18 வயதுக்கு மேல் உள்ள இந்தியர்கள் அனைவரும் இதில் இணைந்து பயன்பெறலாம்.
5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும்போது 80-சி வரி விலக்கு உண்டு. இந்த திட்டத்தில் 5 ஆண்டு வைப்பு தொகை திட்டத்தில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் மற்றும் 9 மாதங்களில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும் . அடையாளம் தெரியாத நிறுவனங்களுக்கு சென்று அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழப்பதை விட அரசு அஞ்சலகங்களில் சேமிப்பது மிகவும் பாதுகாப்பான ஒன்று.