Categories
உலக செய்திகள்

OMG: 500 அடி உயரமுள்ள பாறை இடுக்கில் சிக்கிக் கொண்ட நபர்…. மீட்புப் படையினரின் செயல்….!!!!

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டாலி என்ற நகரில் 500 அடி உயரமுடைய குன்றின் நடுவே பாறை இடுக்கில் ஒரு நபர் சிக்கிக் கொண்டார். இந்த தகவலை அறிந்த மீட்பு படையினர் ஹெலிகாப்டரில் சென்று அந்த நபரை மீட்டு உள்ளனர். இதையடுத்து அந்த மீட்பு படையினர் மீட்ட வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

மேலும் அந்த நபர் பாறையின் இடுக்கில் எப்படி சிக்கிக் கொண்டார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் அந்த நபர் குன்றின் நடுவே சிக்கி கொண்டிருப்பதை மீனவர் ஒருவர் பார்த்துள்ளார். அதன் பிறகு அவர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தபின், அந்த இடத்திற்கு மீட்புப் படையினர் வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டரில் வந்து அந்த நபரை பத்திரமாக மீட்டு தரையிறக்கியுள்ளனர்.

Categories

Tech |