தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் டி ராஜேந்திரன். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் அவருடைய மகன் சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம்.
— Silambarasan TR (@SilambarasanTR_) May 24, 2022
அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிதளவு ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், அவர் உடல் நலன் கருதி உயர் சிகிச்சைக்காக தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுயநினைவுடன் நலமாக இருக்கிறார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் விரைவில் சந்திப்பார் .என் தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.