அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் தென்னக ரயில்வே அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினத்தில் அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. காயல்பட்டினத்தில் ரெட் ஸ்டார் சங்கம் சார்பாக அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியானது சென்ற மூன்று நாட்களாக நடைபெற்று வந்ததில் தென்னக ரயில்வே அணி முதலிடம் பிடித்துள்ளது. மேற்கு ரயில்வே மும்பை அணி 2வது இடம் பிடித்தது. சென்னை ஐ பி எஸ் அப்துர் ரஹ்மான் கிராண்ட் பல்கலைக்கழக அணி மூன்றாம் இடம் பிடித்தது. மங்களூர் ஆல்வா பல்கலைக்கழக அணி நான்காம் இடத்தை பிடித்தது.
இதையடுத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ரெட் ஸ்டார் சங்கத்தின் மூத்த உறுப்பினர் வட்டம் ஹஸன் மரக்கார் தலைமையில் நடைபெற்றது. இந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இவ்விழாவின் பலர் கலந்து கொண்டார்கள். இறுதியில் ஒன்றிய பொருளாளர் வேல்துரை நன்றியுரை வழங்கினார்.