Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“இதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்” கண்டுபிடிக்கப்பட்ட கற்கால குழிகள்…. கள ஆய்வு செய்த மரபுசார் அமைப்பு தலைவர்….!!!!

மரபுசார் அமைப்பின் தலைவரான ராஜ் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அச்சமங்கலம் பகுதியில் மரபுசார் அமைப்பின் தலைவரான ராஜ் பன்னீர்செல்வம் கள ஆய்வு செய்தார். அப்பகுதிகளில் மழைநீர் தேங்கும்படி சுனைகள் காணப்பட்டது. இதனை சுற்றி  கற்கால மனிதர்கள் ஆயுதங்களை தீட்ட பயன்படுத்திய சிறு சிறு குழிகள் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து மரபுசார் அமைப்பின் தலைவரான ராஜ் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்கால மனிதர்கள் தங்கள் ஆயுதங்களை தீட்டுவதற்கு நீர் தேவைப்படும்.

இதனால் நீர் தேங்கும் படி குழிகளை செய்து சமவெளி பரப்பில் தங்களது ஆயுதங்களை தீட்டி  வந்துள்ளனர். இந்த பகுதியில் மட்டும் 15 குழிகள் சேதமடையாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கற்கால மனிதர்கள் வாழ்ந்த பகுதி என கருதலாம். எனவே தமிழக தொல்லியல் துறை இந்த பகுதியை  பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |