மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தென்னையை ரூகோஸ் என்ற புதிய நோய் தாக்குகிறது. இந்நிலையில் இந்த நோய் அதிக சேதத்தை உண்டாக்கும். இந்த பூச்சிகள் தாக்குவதால் ஆரம்ப நிலையில் ஏற்படும் பாதிப்பை தடுக்க மஞ்சள் ஒட்டு பொறிகளை ஏக்கருக்கு 7 முதல் 10 என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தி பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்.
இந்த பூச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே தாக்குகிறது. எனவே தேவையான தண்ணீரில் 3 கிராம் ஜசேரியாபியூமோசோரசே என்ற பூஞ்சாணம் மற்றும் 25 கிராம் நிர்மா பவுடர் ஆகியவற்றை கலந்து தெளிக்கலாம். மேலும் இந்த பூச்சிகளால் ஏற்பட்ட கரும்பூஞ்சாண வளர்ச்சியை அகற்ற வேண்டும் என்றால் ஒரு லிட்டருக்கு 10 கிராம் மைதா மாவு பசையை கலந்து தென்னை இலைகளின் மேல் பகுதியில் தெளிக்க வேண்டும். மேலும் வேப்பங்கொட்டை, எண்ணெய் கரைசல், மண்ணெண்ணெய், ஆகியவற்றையும் தெளிக்கலாம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்