அர்ஜுன் தாஸ் நடிக்கும் அநீதி திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான அர்ஜுன் தாஸ் வசந்தபாலன் இயக்கத்தில் அநீதி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கின்றார். இப்படத்தை Urban Boyz என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.
படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க வனிதா விஜயகுமார், அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ் சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா ஆகிய பலர் நடிக்கிறார்கள். படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பை நிறைவு பெற்றுள்ளது. மேலும் படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.