Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கல்குவாரியில் உரிமம் தடைசெய்யப்பட்டது” ஆய்வு செய்த அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அடைமிதிப்பான்குளம் பகுதியில் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் கடந்த 17-ஆம் தேதி ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்து விட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய  படுகாயம் அடைந்த 2  பேரை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், பேரிடர் மீட்பு  குழு ஒருங்கிணைப்பாளர் சுதாகரன், உதவி ஆட்சியர் சந்திரசேகரன், தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், தாசில்தார் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் உடன் இருந்துள்ளனர்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள 55 கல்குவாரிகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் , கனிமவளத் துறை அலுவலர் ஆகிய  அதிகாரிகள் ஆகியோர் கொண்ட 6 சிறப்பு குழுக்கள் ஆய்வு செய்ய உள்ளது. அதன் பின்னர் குவாரியில் சட்ட விதி முறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறும். மேலும் விபத்து நடந்த கல்குவாரியில் உரிமம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது குவாரி செயல்படவில்லை. இந்நிலையில் இறந்த ஒருவரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற உடல்களை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இறந்த 4 பேரின் குடும்பத்திற்கும் முதலமைச்சரின் 15 லட்ச ரூபாய் நிவாரண தொகையை வழங்கியுள்ளோம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |