மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் நகைக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் கச்சேரி தெருவில் கண்ணன்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு கண்ணன் உறவினரது மணிவிழா நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் கண்ணன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் குமராட்சி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் கண்ணனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கண்ணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.