சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கோரிப்பாளையம் பகுதியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வருகிறார். இந்த மாணவன் தனது வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த சைக்கிளை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற வாலிபர் கத்திமுனையில் மாணவனை மிரட்டி குடோனுக்கு தூக்கிச் சென்றுள்ளார். அதன்பிறகு வாலிபர் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது மாணவன் அலறி சத்தம் போட்டதால் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ரஞ்சித் குமார் என்பவரை கைது செய்தனர்.