Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“இறந்தவரின் உடலை 8 கிலோமீட்டர் டோலி கட்டி எடுத்துச் செல்லப்பட்ட அவல நிலை”…. கோரிக்கை விடுக்கும் மக்கள்….!!!!!

இறந்தவரின் உடலை மலை கிராமத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் 8 கிலோ மீட்டர் டோலிகட்டி பொதுமக்கள் எடுத்துச் சென்றார்கள்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஊராட்சிக்குட்பட்ட நெக்ன்னாமலை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் பெங்களூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நிலையில் உடல் நலக்குறைவால் காலமானார். அதனால் அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊர் நெக்ன்னாமலைக்கு எடுத்துச் செல்ல பெங்களூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மலை அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மலைக்குச் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் அவரின் உடலை டோலிகட்டி 8 கிலோமீட்டர் கிராம மக்கள் தோளில் சுமந்து எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது. இதைப் பார்த்த அவரின் மனைவி கதறி கதறி அழுதார். இந்நிலையில் மலை கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் தார் சாலை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |