Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! யோசனை மேலோங்கும்..! தொந்தரவு உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாளில் நீங்கள் வேண்டாத நபரை முக்கியமான இடத்தில் சந்திப்பீர்கள்.

இன்று நீங்கள் சின்ன சின்ன பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும். உங்களுக்கு இன்றைய நாளில் இருந்து சந்திராஷ்டமம் தொடங்குகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. தேவையில்லாத விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டாம். கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டு வெற்றி கிடைக்கும். இன்று உங்களுக்கு சீரான ஓய்வு உடல் நலத்தை காக்கும். அவசரப்பட்டு எந்த ஒரு விஷயத்திலும் தலையிடாமல் இருப்பது சிறந்தது. எந்த விஷயத்திலும் நீங்கள் அலட்சியம் காட்டாமல் நடந்து கொள்வது நல்லது.

இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காரமான உணவுகளை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. தொழில் மற்றும் வியாபாரம் பற்றிய முக்கியமான முடிவுகளை எடுக்கும்பொழுது பெரியவர்களிடம் ஆலோசித்து எடுப்பது மிகவும் சிறந்தது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களை மதித்து நடப்பது மிகவும் சிறந்தது. இன்று உங்களுக்கு பண வரவு தாமதமாகவே வந்து சேரும். இன்று நீங்கள் ஆடம்பர பொருட்களை எச்சரிக்கையுடன் கையாள்வது சிறந்தது. செலவையும் குறைத்து கொள்வது மிகவும் நல்லது. தேவையிருப்பின் மட்டுமே நீங்கள் அந்தப் பொருளை வாங்குவது மிகவும் சிறந்தது. இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில சிரமங்கள் உண்டாகும். சில நபர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். அதனால் நீங்கள் தர்மசங்கடத்திற்கு மாற வேண்டிஇருக்கும். இன்று உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு உறவினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து வந்த சங்கடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி விடும். பெண்கள் நீங்கள் எதையோ பற்றி யோசித்தவாறே இருப்பீர்கள். எதைப்பற்றியும் யோசிக்காமல் அனைத்தையும் நீங்கள் லேசாக எடுத்துக் கொள்வது சிறந்தது. தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று நீங்கள் யாருக்காகவும் ஜாமீன் கையொப்பமிடமால் இருப்பது சிறந்தது. வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. இன்று மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நன்மையை பெற்றுக் கொடுக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 8.அதிர்ஷ்டமான நிறம் இளம் மஞ்சள் மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |