ரஷ்ய நாட்டில் கடந்த 15-ஆண்டுகளாக ஸ்டார்பக்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது அங்கிருந்து அந்த நிறுவனம் வெளியேறுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபலமான ஸ்டார்பக்ஸ் காஃபி என்ற நிறுவனம் 130 கிளைகளுடன் மற்றும் 2000 ஊழியர்களை கொண்டு ரஷ்யாவில் இயங்கி வந்தது.
இந்நிலையில் தற்போது உக்ரைன்- ரஷ்யா போரின் காரணமாக மெக்டொனால்டு, ரெனால்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களும் ரஷ்ய நாட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். இதையடுத்து ரஷ்ய நாட்டில் இயங்கி வருகின்ற மேற்கத்திய நிறுவனங்களும் அந்நாட்டிலுள்ள தங்களின் சொத்துக்களை விற்பனை செய்து மற்றும் நாட்டின் உள்ளூர் நிறுவனங்களிடம் ஒப்படைத்தும் வருகிறது. இவ்வாறு ரஷ்யாவுடனான தங்களது வர்த்தகத்தை முறித்து வருகின்றன.