Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து 10 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

விடைத்தாள்களை ஆசிரியர்கள் மன உளைச்சல் இன்றி திருத்த ஏதுவாக பல சலுகைகளை தேர்வுத்துறை வழங்கியுள்ளது. அதில் ஒன்றாக ஆசிரியர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |