Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது… உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (25) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் – உடுமலைப்பேட்டை:

பாலப்பம்பட்டி துணை மின் நிலையம்:
தொட்டியனுார் பீடர், பெரியகோட்டை பிரிவு, சுந்தர் நகர், அண்ணா குடியிருப்பு, மலைப்ப கவுண்டர் லே-அவுட், காந்திநகர், நேரு வீதி, ராஜேந்திரா ரோடு, நேரு நகர், கல்யாணி நகர் ஆகிய பகுதிகளில் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின்தடை செய்யப்படும்.

பூலாங்கிணர் துணை மின் நிலையம்:
தளி பீடர், வாளவாடி, தென்பூதிநத்தம், அம்மாபட்டி, அமணசமுத்திரம், தளி, திருமூர்த்திநகர், ஜல்லிபட்டி, குறிச்சிக்கோட்டை, கொங்கலக்குறிச்சி, சின்ன குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் இன்று  மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது.

கிளுவன் காட்டூர் துணை மின் நிலையம்:
கொமரலிங்கம் மற்றும் மில் பீடர், கொமரலிங்கம், சாமராயபட்டி, பெருமாள் புதுார், கொழுமம், வீரசோழபுரம், குப்பம்பாளையம், ருத்ராபாளையம் ஆகிய பகுதிகளில்இன்று  மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் அறம்வளர்த்தான் தெரிவித்துள்ளார்.

அங்கலக்குறிச்சி துணை மின் நிலையம்:
துறையூர், மஞ்சநாயக்கனுார், அரசூர், கம்பாலபட்டி மற்றும் குள்ளேகவுண்டனுார் ஆகிய அங்கலக்குறிச்சியை சுற்றியுள்ள பகுதிகளில்இன்று  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மின் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி:
காலை 10.௦௦ மணி முதல் மதியம் 2.௦௦ மணி வரை கிருஷ்ணா நகர் மின்பாதை: கிருஷ்ணா நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

Categories

Tech |