ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை மீண்டும் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பரில் ப்ரீபெய்டு கட்டணம் 20% முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் 10 சதவீதம் முதல் 12% வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை இந்த வருடம் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Categories